உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு வழிபாடு: கோயில்களில் அதிகாலையில் முதல் பக்தர்கள் கூட்டம்

புத்தாண்டு வழிபாடு: கோயில்களில் அதிகாலையில் முதல் பக்தர்கள் கூட்டம்

கம்பம்: புத்தாண்டை முன்னிட்டு கம்பம் பகுதியில் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்,

புத்தாண்டுத் பிறந்ததை முன்னிட்டு இன்று அதி காலை 5 மணி அளவில் கம்பம் கம்பராய பெருமாள் கோவில், வேலப்பர் கோவில், கவுமாரிஅம்மன் கோயில்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் உலக நலன் வேண்டி பிரார்த்தனை செய்தனர் ,பல கோயில்களில் பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோன்று உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் ,யோகநரசிங்கப் பெருமாள் கோயில், சின்னமனூர் லட்சுமி நராயணப்பெருமாள்ல கோவில், சிவகாமி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோன்று ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச், உத்தமபாளையம், கம்பம் சர்ச்சுகளில் புத்தாண்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !