உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை பக்தர்களுக்கு நத்தம் போலீசார் விழிப்புணர்வு

பாதயாத்திரை பக்தர்களுக்கு நத்தம் போலீசார் விழிப்புணர்வு

செந்துறை: பழனி முருகன் கோவிலில் வரும் ஜனவரி 18 தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நத்தம் வழியாக பழனி செல்வர். பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த நத்தம் போலீசார் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். அதில் ரோட்டின் இடது புறமாக ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் சொல்ல வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் ரோட்டில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !