கணபதி பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :1530 days ago
கருமத்தம்பட்டி: கணபதி பாளையம் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த கணபதி பாளையத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இக்கோவில்களில் கும்பாபிஷேகம் முடிந்து, 48 வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை சிறப்பு ஹோம பூஜை மற்றும் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். பூஜைக்குப் பின், 150 பக்தர்கள் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர்.