உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோயிலில் அனுமான் ஜெயந்தி உற்சவ சாந்தி விழா

கோதண்டராமர் கோயிலில் அனுமான் ஜெயந்தி உற்சவ சாந்தி விழா

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி உற்சவ சாந்தி விழா நிறைவடைந்தது. இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி, தினமும் அனுமன் பக்தி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, பக்தர்கள் வடைமாலை சாற்றி வழிபட்டனர். இந்நிலையில் இன்று காலை அனுமன் ஜெயந்தி விழா உற்சவ சாந்தி நடந்தது. அப்போது மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !