பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1387 days ago
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை வழிபாடு நடந்தது.அதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.