உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் புதியதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. ராமலிங்க குருக்கள் மேற்பார்வையில் சிவாச்சாரியர்கள் ஆறுகால யாகபூஜை நடத்தி நேற்று காலை புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் ராமேஸ்வரம்கோயில் அறங்காவலர் சோமநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் செந்தில்நாதன், நகராட்சி தலைவி சுமித்ரா, எழுவங்கோட்டை வடுகநாதன் ஸ்தபதி, செல்லம் மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் செல்லம், வள்ளி டெக்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன், சிமென்ட் டீலர் ஆர்எம். மாணிக்கம், வர்த்தக சங்க தலைவர் சுந்தரராஜன், முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் குமாரவேலு, செல்வம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் செல்வம், கவுதம் குமார்,கூட்டுறவுத்துறை அருள்ஜோதி, காஜா எவர்சில்வர் மார்ட் முகமதுபாட்சா, கரூர் நெய் ஸ்டோர் பாலசுப்பிரமணியன், சூர்யா எலக்ட்ரிக்கல்ஸ் துரைபாண்டியன், ஐயப்பன் கோயில் நிர்வாகி சந்திரன் செட்டியார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !