உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரப்பன்வலசையில் மயூரவாகன சேவன விழா

பிரப்பன்வலசையில் மயூரவாகன சேவன விழா

ரெகுநாதபுரம்: பிரப்பன் வலசை மயூரநாதப் பெருமான், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயில் உள்ளது. 98ஆம் ஆண்டு மயூர வாகன சேவன விழா ஜன., 3, 4 ஆகிய இரு தினங்களில் நடந்தது. மூலவர் மயூரநாதப் பெருமான் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்ஸவமூர்த்தியான பாம்பன் சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோயிலை 3 முறை வெள்ளி வேல், வஜ்ராயுத வேல் ஏந்தியவாறு பக்தர்கள் வலம் வந்தனர். சண்முக கவசம், பஞ்சாமிர்த வண்ணம் உள்ளிட்ட முருகன் பாடல்கள் பாடப்பட்டது. ஆன்மீக சொற்பொழிவு, ஆறுகால பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !