வீ.சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி ஊர்வலம்
ADDED :1389 days ago
ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 28ம் தேதி தொடங்கியது. விடுமுறை தினமான நேற்று, திரளான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அப்போது பல பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், வேல் அலகு, வாள் அலகு, காவடி அலகு குத்தியும் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நாளை மறுநாள் பொங்கல் விழா நடக்கிறது.