நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவினை முன்னிட்டு நேற்று இரவு நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான யாத்ரீகர்கள் கலந்துக் கொண்டனர்.
நாகையை அடுத்த நாகூரில் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465 வது ஆண்டு கந்தூரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக வரும் 13ம் தேதி இரவு, நாகையிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 14 ம் தேதி அதிகாலையில் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளத்துடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கொடிகள் கொண்டு செல்லப்பட்டது. இரவு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின் 5 மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், தர்கா ஆதினங்கள் முன்னிலையில் தர்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. தர்கா பரம்பரை கலிபா துவா" ஒதியப்பின் கொடியேற்றும் வைபவம் நடந்தது நிகழ்ச்சிகளில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.