உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை

மதுரை: கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
* தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.
* அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை.
* பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் ஒத்திவைப்பு
* அனைத்து பொது பேருந்துகள், புறநகர் ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதி.
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !