உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதைக்கப்பட்ட அம்மன் சிலை தோண்டியெடுப்பு: பக்தர்கள் பரவசம்

புதைக்கப்பட்ட அம்மன் சிலை தோண்டியெடுப்பு: பக்தர்கள் பரவசம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட அம்மன் சிலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

திண்டுக்கல் குமரன் தெரரு காளியம்மன் கோயிலில் நவதானியத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை 15 ஆண்டுகளுக்கு முன் கருவறையில் புதைக்கப்பட்டது. நேற்று ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சிலையை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட போது இருந்த அதே நிலையில் சிலை இருந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியது: பக்தர்கள் கனவில் தோன்றி கூறியதால் சிலையை வெளியே எடுத்தனர். புதைக்கப்பட்ட போது இருந்த அதே நிலையில் சிலை இருந்தது வியப்பை அளிக்கிறது என்றனர். பின் அம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !