திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்
ADDED :1372 days ago
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் நிகழ்ச்சியின் 4ம் நாளில் சுவாமி, ஆழ்வார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத பகல் பத்து உற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து நான்காம் நாள் விழாவில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சிஅளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.