உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் மூன்று வேளை அன்னதானம்

வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் மூன்று வேளை அன்னதானம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு அன்னதானம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. குறிப்பாக காலை, மதிய வேளையில் சங்க வளாகத்தில் அன்னதானம் நடக்கிறது.

இரவு 8:30 மணிக்கு 5 முனை சந்திப்பு, பஸ் நிலையம், ஆஸ்பிடல் எதிரில் சன்மார்க்க சங்க நிர்வாகி சீனிவாசன் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக சென்று ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கமாக ஐந்துமுனை சந்திப்பில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !