உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலை மலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

சோலை மலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடி யேற்றம் நடந்தது.

மதுரை, அழகர்கோவில் உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சோலை முருகன் கோவில் உள்ளது. இது முருகனின் ஆறாவது படைவீடு ஆகும். இக் கோவிலில் தைப்பூச திருவிழா மேளதாளம் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின் சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது. விழா 18ம் தேதி நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தினால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !