மேலும் செய்திகள்
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
1349 days ago
நால்வர் இசைத்தமிழ் ஆராதனை அவிநாசி கோவிலில் கோலாகலம்
1349 days ago
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
1349 days ago
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருச்சேறை உள்ள சாரநாத பெருமாள் கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையடுத்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றப்பட்டது. அப்போது கொடிமரம் அருகே சாரநாயகிதாயாருடன் சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் செய்யப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் 26ம் வரை நடைபெற உள்ள கோவில் விழாக்களில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் முக்கியமாக 19ம் தேதி நிலைத் தேரோட்டமும், 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் காணுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
1349 days ago
1349 days ago
1349 days ago