உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தெப்பத்திற்கான இடத்தை மீட்டு புனரமைப்பு செய்ய ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும். 800 ஆண்டுகளை கடந்த இக்கோயில் தெப்பம் கிழக்கில் ராஜகோபுரம் எதிரில் உள்ளது. தெப்பத்தை சுற்றி உள்ள இடங்களில் வீடுகள் கட்டி தற்போது குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளை தெப்பத்தின் கரைகள் வரை நீட்டிப்பு செய்து தெப்பத்தின் சுவடுகளை மறைத்து விட்டனர். குப்பை கிடங்கான தெப்பம் தற்போது கோயில் எதிரில் கழிவுகள் கொட்டப்படும் சிறு பள்ளமாக உள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன்பு தெப்பத்தில் தேக்கப்பட்ட நீரை கோயில் தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இடத்திற்கான வாடகை என்ற பெயரில் தெப்பத்திற்கான இடத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்த ஹிந்து அறநிலையத்துறை அனுமதித்து உள்ளது. கோயில் தெப்பத்தை மீட்டு புனரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஹிந்து அறநிலையத்துறை உயரதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு கோயில் தெப்பத்தை மீட்டு புனரமைப்பு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !