உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஆண்டிபட்டி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் இன்று நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சிக்குப் பின் கோயில் பிரகாரத்தில் சுவாமி சுற்றிவந்து கருவறை சென்றடைந்தது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !