தைப்பொங்கல் விழா கோவில்களில் பக்தர்களின்றி சிறப்பு பூஜை
ADDED :1406 days ago
சாத்துார்: தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாத்தூர், இருக்கன்குடி, ஒனடப் பட்டி வன்னி விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஓ மைக்ரான் கொரோனா பரவலை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஒடைப்பட்டி மடம் வன்னி விநாயகர் கோவில், துலுக்கன்குறிச்சி வாழை மரபாலசுப்பிரமணி சுவாமி கோவில களில் உலக மக்களின் நன்மை வேண்டி கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.