கோயிலின் முன் மாலையை கழட்டி விரதம் முடித்த பக்தர்கள்
ADDED :1366 days ago
பழநி: பழநி கோயிலில் வாயிலில் நின்று மாலையணிந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கோயில் முன் மாலையை கழட்டி விரத முடித்தனர்.
பழநிக்கு பாதயாத்திரையாக வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் கிரிவலம் வந்து பாத விநாயகர், திருஆவினன்குடி கோயிலில் முன் நின்று வழிபடுகின்றனர். மேலும் மாலை அணிந்து வந்த பக்தர்கள் பாத விநாயகர் கோயில் முன்பு மாலையை கழட்டி விரத முடித்தனர். சில பக்தர்கள் தனியார் மண்டபங்களில் முடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிரி வீதிகளில் விளையாட்டுப் பொருட்கள் பஞ்சாமிர்தம் போன்றவை வாங்கி செல்கின்றனர்.