வெங்கடேச பெருமாள் கோவிலில் பொங்கல் விழா சிறப்பு பூஜை
ADDED :1460 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் பொங்கல் விழா சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. தொற்று பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டி நடைமுறைக்குட்பட்டு விழாவில், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.