உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் : ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. அமாவாசை திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் கொடியேற்றம் நடந்தது. கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். இன்று காலையில் சேர்ம விநாயகர் திருஉலா, இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல், நாளை இரவு முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நடக்கிறது. 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் இரவு பல்வேறு சப்பரத்தில் வெவ்வேறு கோலங்களில் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்புசாத்தி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. 19ம் தேதி, 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியநாடார் செய்து வருகிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !