காஞ்சி மஹாபெரியவர் சொல்றதைக்கேளுங்க
ADDED :1460 days ago
அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் கூட நீங்கி விடும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில், எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே
ஒளி பெற்றுத் திகழும் என சொல்லிஉள்ளார். அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.