ஆயிரக்கணக்கான காவடிகளுடன் பழநியில் குவிந்த பக்தர்கள்
ADDED :1458 days ago
திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் கோயில் மூடப்பட்டிருந்த போதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவார பகுதியில் காவடியாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் அலகு குத்தி சென்றனர், காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி உடன் முகாமிட்டுள்ளனர், இன்று முக்கிய நிகழ்வான திருக்கல்யாணமும், நாளை மாலை தேரோட்டமும் நடக்கிறது.