உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நிறைவேற தைப்பூச நாளில் முருகனை வழிபடுங்க!

நினைத்தது நிறைவேற தைப்பூச நாளில் முருகனை வழிபடுங்க!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேரும் நாளில் தைப்பூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி முருகனை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பூஜையறையில் விளக்கேற்றி முருகனுக்கு செந்நிற மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பாலன் தேவராய சுவாமி எழுதிய கந்தசஷ்டி கவசம், அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி பாடல்களைப் படித்து தீபாராதனை செய்ய வேண்டும். காலை, இரவில் உணவைத் தவிர்க்க வேண்டும். மதியம் எளிய உணவு உண்ண வேண்டும். பட்டினி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் காலையிலும், இரவிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன் சன்னிதியில் விளக்கேற்றி பிரகாரத்தை வலம் வர வேண்டும். திருமணம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட தடங்கல் நீங்க இந்த விரதம் மேற்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !