உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி அருகே கி.பி.15 ஆம் நூற்றாண்டு வாமனக்கல் கண்டறியப்பட்டுள்ளது

பழநி அருகே கி.பி.15 ஆம் நூற்றாண்டு வாமனக்கல் கண்டறியப்பட்டுள்ளது

ஜன; பழநி, அருகே தாமரை குளத்தில் கி.பி., 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருவாமனக்கல் கண்டறியபட்டுள்ளது.


பழநி, தாமரைக்குளம் கிராம பகுதியில் வயல்வெளியில் தண்டபாணி என்பவர் திருவாழிக்கல் இருப்பதை கண்டறிந்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி இடம் ஆய்வு செய்ய தெரிவித்தார். அதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்," பழநி அருகே உள்ள தாமரைக் குளம் கிராமத்தின் வயல்வெளியில் இக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதி பழங்காலத்தில் அமரப்புயங்கசதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. இக்கல் தரைக்கு மேலே 30 சென்டிமீட்டர் அகலமும் 60 சென்டிமீட்டர் உயரமும் உள்ளது. சந்திரன், சூரியன், கமண்டலம், குடை, துறவுகோல் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. இது ஸ்ரீமத்பகவத் புராணத்தில் குறிப்பிட்டுள்ள திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதார சின்னங்களான அவரது கையில் உள்ள தாழைமடல் குடை அல்லது பனை ஓலை உடை ஆகும். கமண்டலம்,கனத்த கயிறுடன் கூடிய கைத்தடி ஆனது துறவுகொல் என அழைக்கப்படும். குடையை சூரியனும், தடியை சந்திரனும், கமண்டலத்தை பிரம்மாவும், வாமன அவதாரத்திற்கு பரிசளித்ததாக பகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த குறியீடுகளை உடைய 15 ஆம் நூற்றாண்டு திருவாழிகல், பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பட்டரான அக்காலத்தில் மாத்தன் என்பவருக்கு ஒரு மா அளவுள்ள நிலம் கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மா என்பது 100 குழிகளுக்கு சமம். பண்டைய வைணவ கோவில்களில் கொடை அளிக்கப்படும் நிலங்கள் திருவிடையாட்டம் என்றும் கோயில் அர்ச்சகர்களுக்கு கொடை அளிக்கப்படும் நிலங்கள் பிரம்மதேயம் என்றும் அழைக்கப்படுகின்றன. வைணவ கோடைக்குரிய கல் திருவாழிகல் என அழைக்கப்படும். தற்போது கிடைத்துள்ள கல்லில் சக்கரம் இல்லை. ஆனால் மாவலி மன்னரிடம் மூன்றடி நிலம் அளந்து கேட்ட திருமாலின் வாமன அவதார சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் நடைபெற்ற மாத்த பட்டர் பற்றிய குறிப்பு இல்லை. பெருமாள் கோயில் பற்றிய குறிப்பு இல்லை. வேதங்களில் சிறந்த மறையோன் என்பது மாத்தன் என்ற பொருள்படும் இதனை திருதென்புறக்காடு எனும் திருகுறுந்தொகையில் ஐந்தாம் பதிகம் 63 ஆம் பாடலில் பயன்படுத்தி உள்ளனர். இந்த வாமன கற்கள் இறந்து போன வைணவர்களின் நினைவிடங்கள், அல்லது கொடை பெற்ற நிலங்களில் வைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் அக்கால வைணவ மரபு உள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது." என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !