திருப்போரூர் கோவிலில் விடையாற்றி உத்சவம்
ADDED :208 days ago
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் தேதி திருக்கல்யாணம் வைபவத்துடன் விழா நிறைவடைந்தது.
பிப்.,27 ம் தேதி தேர் திருவிழாவும் மார்ச் 2ம் தேதி, தெப்ப திருவிழாவும், 5ம் தேதி திருக்கல்யாண உத்சவமும் நடந்து முடிந்தது.
திருக்கல்யாண உத்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்களுக்கு, விடையாற்றி உத்சவம் நடைபெறுவது வழக்கம்.
இரண்டாம் நாள் உத்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பகல் 11:00 மணிக்கு உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு மஹா அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. விழாவில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.