பரமக்குடி ஆதி முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா
ADDED :1 days ago
பரமக்குடி: பரமக்குடி சின்னக்கடை தெரு ஆதி முத்துமாரியம்மன் கோயில் 157ம் ஆண்டு முளைக்கொட்டு விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
கோயிலில் செப்., 22ல் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. தினமும் இரவு ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். செப்., 29ல் கொலு வீற்றிருத்தல் வைபவம், இரவு வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. செப்.,30 மாலை மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், இளநீர் காவடி, அக்னி சட்டி எடுத்தும் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து ஒரு மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் தீபாராதனைகள் நிறைவடைந்து பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.