ஜிலேபி மற்றும் அதிரசம் அலங்காரத்தில் அருள்பாலித்த விருதுநகர் ஆஞ்சநேயர் சுவாமி
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜிலேபி மற்றும் அதிரசம் அலங்காரம் மற்றும் உற்சவ ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவப் பொடிகளால் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. மூலவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜிலேபி மற்றும் அதிரசம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவம் ஆஞ்சநேயருக்கு பால், திருமஞ்சன பொடி, தயிர், இளநீர், பன்னீர்,தேன், சந்தனம், பல்வேறு திரவப் பொடிகளால் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடத்தி தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூலவர் சீனிவாச பெருமாள் உற்சவர் பெருமாள் தாயார் களுக்கு துளசி கொண்ட அர்ச்சனைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சுவாமி பெருமாளை வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.