உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்; கட்டண தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்; கட்டண தரிசனம் ரத்து

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. காலாண்டு தேர்வு நேரம் என்பதால் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையால் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கட்டண தரிசனத்தை ரத்து செய்தும், பக்தர்கள் தொலைவதை தவிர்க்க செல்போன் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !