திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவது ஏன்?
ADDED :1460 days ago
சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இணைய வேண்டும் என விரும்பிய பார்வதி தவத்தில் ஆழ்ந்தாள். அவளை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக சிவன் காட்சியளித்தார். சிவனின் உடலில் பார்வதி இடம் பெற்றதை குறிக்கும் விதத்தில் மகாதீபம் ஏற்றுகிறோம். மலையே சிவனின் அம்சம். அதன் மீதுள்ள தீபம் பார்வதியின் அம்சம். அப்போது திருவண்ணாமலை கோயிலில் அர்த்தநாரீஸ்வர தாண்டவம் நிகழும்.