விழா நிறைந்த மாதம்
ADDED :1466 days ago
தைமாதம் முழுவதும் பக்திமயமாகவும், விழா மயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில் ஆறு, கடற்கரையில் உறவினர், நண்பர்களுடன் கூடி மகிழும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.