நெல் கோட்டை கட்டும் விழா
ADDED :1409 days ago
சோழவந்தான் : சோழவந்தான் அருகே தேனுாரில் அழகர்கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் விழா நடந்தது. இப்பகுதி விவசாயிகள் தை வளர்பிறையில் அறுவடை செய்யும் முதல் நெல்லை ஆண்டுதோறும் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு நன்றிக்கடனாக படைத்து வருகின்றனர். இந்தாண்டு விவசாயி செந்தில் நிலத்தில் பாரம்பரிய முறைப்படி நெற்கதிரை கையால் அறுவடை செய்து, கதிரடித்து, திரித்த வைக்கோல் கயிற்றில் நெல்லை கோட்டை கட்டி அழகுமலையான் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் நெல் கோட்டையை விவசாயிகள் அழகர்கோவிலில் இன்று (ஜன.,19) ஒப்படைக்கின்றனர்.