கமுதி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1413 days ago
கமுதி: கமுதி அருகே நகர்புளியங்குளம் கிராமத்தில் சித்தி விநாயகர், பாம்புலம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது விழாவை முன்னிட்டு ஜன.19ஆம் தேதி தேவதை அணுக்ஞை, கணபதி ஹோமம் தொடங்கி பூர்வாங்க பூஜைகள், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை,பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. பின்பு ஜன.20ஆம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபூஜை, நாடி சந்தனம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டது. பின்பு கருடவாகன புறப்பாட்டுக்கு பின்பு கொடுமலூர் சிவாச்சாரியார் நவநீத குருக்கள தலைமையில் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.சித்திவிநாயகர், பாம்புலம்மன், ராக்கச்சி அம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.