சேதமடைந்த கோயில் ரோட்டால் பக்தர்கள் அவதி
ADDED :1365 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி முருகன் கோயில் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். ஒன்றிய நிதி மூலம் சில ஆண்டுகளுக்கு முன் காபி ஆராய்ச்சி நிலையம் - கூடம்நகர் வரை 4 கி.மீ., ரோடு அமைக்கப்பட்டது. தரமற்ற ரோடு பணியால் அமைத்த சில மாதங்களிலே பல்லழித்தது. பருவ மழைக்குப்பின் ரோடு சேதமடைந்து குண்டு, குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து விபத்து அபாயத்தில் உள்ளது. பாலமுருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் ரோட்டின் நிலையால் அவதியடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.