குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்
ADDED :1368 days ago
குற்றாலம்: குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம், மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் இலஞ்சி திருவிலஞ்சி குமரன் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று நடந்தது.இலஞ்சி திருவிலஞ்சி குமரன் குற்றாலம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து, சுவாமி, அம்பாள், திருவிலஞ்சி குமரனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. மாலை சுவாமி, அம்பாள், திருவிலஞ்சி குமரன் தெப்பத்தில் 11 முறை வலம் வந்து அருள்பாலித்தனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் கலந்து கொண்டனர்.