உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசித்திப்பெற்ற நாகநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பிரசித்திப்பெற்ற நாகநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரில் பிரசித்திப்பெற்ற நாகநாத சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை அடுத்த நாகூரில் பிரசித்திப் பெற்ற நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது பரிகார தலமான, இக்கோவிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 19 ம் தேதி காலை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, ரஷாபந்தன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜையுடன், மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. சிறப்பு தீபாரதனைக்கு பின் மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு, காலை 10 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு . விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !