பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை
ADDED :1393 days ago
சூலூர்: குமாரபாளையம் பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பெரிய வலம்புரி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றவை. இவற்றில், பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 48 வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. தர்மஸ்தலம், கொல்லூர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் விநாயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் முடிந்து அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.