சோளீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1350 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு நேற்று மாலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பால், தயிர், இளநீர், தேன்,உட்பட 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது