சமுதாய தர்மம்
ADDED :1385 days ago
தற்போது உள்ள சூழலில் எங்கும் நாம் அவசரமாகத்தான் செல்வோம். கேட்டால் ‘எனக்கு முக்கிய வேலை உள்ளது’ என பதில் சொல்வோம். உதாரணமாக ரயில்வே கேட் சாத்தி இருந்தால் பொறுமை இருக்காது. திறந்ததும் முதலில் நாம்தான் போக வேண்டும் என்று ஒருவரையொருவர் முந்துவதால் டிராபிக் ஜாம் ஆகும். எவ்வளவு சீக்கிரம் போக வேண்டும் என அவசரப்படுகிறோமோ அவ்வளவு தாமதமாகும்.
இதற்கு காரணம் எதிரே வருபவர்களுக்கும் அவசர வேலை இருக்கும் என நினைப்பதில்லை. நம்முடைய வேலை முடிந்தால்போதும் என்ற குறுகிய மனப்பான்மையே பலரிடம் உள்ளது. இந்தநிலை மாற வேண்டும். இதுவே சமுதாய தர்மம் ஆகும். அனைவரும் இதை கடைபிடிக்கலாமே