உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீருத்ர ஜப பாராயணம்

உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீருத்ர ஜப பாராயணம்

 திருப்பூர்: ஓடக்காடு காஞ்சி காமகோடி பஜனை மடத்தில் நேற்று, ஸ்ரீருத்ரஜபம் பாராயணம் நடந்தது.ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியின் வழிகாட்டுதலின்படி, உலக மக்கள் நலன்வேண்டி, ஸ்ரீருத்ர ஜபம் பாராயணம், மாதாந்தோறும் நடக்கிறது. அதன்படி, திருப்பூர் ஓடக்காடு ஸ்ரீகாஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், கோவில்களில் நேற்று, ருத்ரஜபம் நடந்தது.ஓடக்காடு பஜனை மடத்தில், காலை, 7:30 மணி முதல், ஏகாதசி ருத்ரஜப பாராயணமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பாரா யணம் நிறைவு பெற்றதும், உலக மக்கள் நலன் வேண்டியும், கொரோனாவில் இருந்து விடுபட வேண்டியும், பொது பிரார்த்தனை நடந்தது.மகாதீபாராதனை, ஸ்ரீருத்ர ஜப பாராயணம் நிறைவு பெற்றது.ஓடக்காடு பஜனை மடத்தில் இன்று, காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீலலிதாசஹஸ்ரநாம ஏகதின லட்சார்ச்சனை வழிபாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !