திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கனுப்பார் வேட்டை உற்சவம்
ADDED :1444 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கனுப்பார் வேட்டை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு பெருமாள் வீதி உலா வந்து, திருப்பார்கடல் நம்பி சன்னதியில் (சத்திரத்தில்) எழுந்தருளல் நடந்தது. காலை 7 மணிக்கு ராமானுஜ ஜீயர் எழுந்தருளி திருமஞ்சன சேவை, கோஷ்டி நடந்தது. மாலை 5 மணிக்கு பெருமாள் சத்திரத்திலிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. இதனை தொடர்ந்து மேலரத வீதியில் த்து கனுப்பார் வேட்டை நடந்தது. பெருமாள் மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்து ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயர் மடம் சிவசங்கரன் தலைமையில், ஜீயர் மடம் ஊழியர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.