பூம்பாறை கோயில் தேரோட்டம்: வடம் பிடித்த பக்தர்கள்
ADDED :1448 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் நடந்தது. கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமி சேவல், மயில், அன்னம், ஆட்டுக்கிடா, காளை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருதல் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படாத சூழல் இருந்து நிலையில் அரசின் அறிவிப்பால் பழநியிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக தேர் மூலம் தோரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பழநி முருகன் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.