உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் சாமி தரிசனம்; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் சாமி தரிசனம்; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (ஜன. 28) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாதந்தோறும் சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து இன்று (ஜன.29) தை மாத பிரதோஷம் மற்றும் ஜனவரி 31 தை அமாவாசை வழிபாட்டிற்காக, பிப்ரவரி 1ஆம் தேதிவரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை முழு அளவில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !