உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்

திருப்புல்லாணி: சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் உத்தரவிற்கிணங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியது.

கோயில் நிலங்களை துல்லியமாக அளவீடு செய்யக்கூடிய டி.ஜி.பி.எஸ்., எனப்படும் டிஜிட்டல் குளோபல் பொசிஷன் கருவி மூலமாக அலுவலர்கள் செய்து வருகின்றனர். கருவியின் மூலமாக 5 மி.மீ., முதல் பல ஏக்கர் வரை மிகவும் துல்லியமாக அளவிட செய்யலாம். கமுதி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, புல்லந்தை மங்களேஸ்வரி நகர், திருவரங்கம் உள்ளிட்ட கோயில் நிலங்களில் தற்போது அளவிடும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறிந்து கொள்ள இயலும். பழமையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !