வைகையில் தை அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1361 days ago
உத்தரகோசமங்கை: வைகை புத்தாளக்கண்மாய் அருகே சிவகாளி அம்மன் கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி நடந்தது. மூலவர் சிவகாளி அம்மன், சப்த கன்னியர், சோனை கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார்.