உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் பன்னிரு திருமுறை இசைப்பேருரை

திருப்பூரில் பன்னிரு திருமுறை இசைப்பேருரை

திருப்பூர்: திருப்பூரில், பன்னிரு திருமுறை, முதல் திருமுறை இசைப்பேருரை துவக்க நிகழ்ச்சி நடந்தது.உமாசங்கர் - சாந்தி அறக்கட்டளை மற்றும் ஓம் பசுமை அங்காடி சார்பில், பன்னிருதிருமுறை இசைப்பேருரை நிகழ்ச்சி திருப்பூர்ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. முதல் திருமுறை துவக்க விழா நடந்தது.திருமுறை மாணவர்களின் இறைவணக்கத்துடன் துவங்கியது. ஆடல்வல்லான் அறக்கட்டளை சுரேஷ்குமார் வரவேற்றார். பவானி சிவனடியார் திருக்கூட்டம் தியாகராசன் துவக்க விழா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைபேராசிரியர் நல்லசிவம் இசைப்பேருரையாற்றினார். திருப்பூர் சபரி டைமண்ட்ஸ் ஜூவல்லர்ஸ் முத்து நடராசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !