வீரக்குமாரசுவாமிக்கு தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்
ADDED :1425 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சந்தனக்காப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பக்தர்கள் கூட்டமின்றி சாமி தரிசனம் செய்து வந்தனர். ஊரடங்கு முடிவுக்கு வந்து வழிபாட்டுத்தலங்கள் அணைத்தும் திறந்து சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் நேற்று அதிக அளவில் காணப்பட்டது. தங்ககவச சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.