புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1349 days ago
புதுச்சேரி : தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தை அமாவாசையான நேற்று புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனையொட்டி, மணக்குள விநாயகர், லாஸ்பேட்டை சுப்ரமணியர், காமாட்சி அம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர், கவுசிக பாலசுப்ரமணியர், சுந்தரவினாயகர், தண்டுமுத்து மாரியம்மன், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். காந்தி திடலில் சுவாமி களுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில், மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி பங்கேற்றது.