பிரம்மதேசம் கோயில் கொடை விழா
ADDED :1348 days ago
அம்பாசமுத்திரம்: பிரம்மதேசத்தில் , 13க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் இணைந்து நடத்திய பிரசித்தி பெற்ற நாலாயிரத்தம்மன் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது.
நாலாயிரத்தம்மன் கோயில் கொடைவிழா கடந்த 25ம் தேதி கால் நாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கைலாசநாத சுவாமி கோயிலில் உற்சவ மூர்த்தி நாலாயிரத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், பால்குடம், முளைபாரி வீதிஉலா கோயிலை சென்றடைந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனைநடந்தது. இரவில், அம்மன் வீதி உலா, படப்பு தீபாரதனை நடந்தது. பிரம்மதேசம் கிராம பஞ். தலைவர் ராம்சங்கர் உட்படகிராம மக்கள் கலந்து கொண்டனர்.