பரமக்குடியில் விவேகானந்தர் வருகை தின விழா
ADDED :1347 days ago
பரமக்குடி : பரமக்குடியில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்த நாள், ஜெயந்தி விழா நடந்தது. ராமகிருஷ்ண ஞான வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த விழாவில், தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார்.சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆன்மிக எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து ராமநாதபுரம், ராமேஸ்வரத்திற்கு சென்று 1897 பிப்.,1ல் பரமக்குடியில் நகராட்சி அருகில் உள்ள குமரன் படித்துறை அருகே மக்களிடம் உரையாற்றினார்.இதனை நினைவு கூறும் வகையில், நகராட்சி அருகில் நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு ராமகிருஷ்ண ஞான வழிபாடு மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.